2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘தேர்தல்கள் தாமதமாவதற்கு எதிர்க்கட்சியே பொறுப்பு’

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரின் அபிவிருத்திக்காக 11,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நகர அபிவிருத்திக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரினார்.  

கண்டி நகர மத்தியில் புனரமைக்கப்பட்டு வந்த ​ஜோர்ஜ்.டி.சில்வா பூங்கா உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை, பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (7) நடைபெற்து. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், கண்டியில், தற்போது 173 மில்லியன் ரூபாய் செலவில் ஜோர்ஜ். டி.சில்வா பூங்காவை புனரமைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கண்டி குட்செட் பஸ் நிலையத்தையும் புகையிரத நிலையத்தையும் மத்திய போக்குவரத்து மய்யங்களாக மாற்றியமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். 

​அதேபோன்று 10 இலட்சத்து 182 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடத்தை, மக்கள் பாவனைக்குக் கையளித்துள்ளதாகவும் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த அபிவிருத்தித் திட்டங்களால் வாழ்வாதாரங்களை இழந்த 824 பேருக்கு, நட்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

அத்தோடு கண்டியை உபாய மார்க்கமான நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு, உலக வங்கியுடன் இணைந்து 11,000 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், பாரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைத்து, அதனை விரைவில் மக்களுக்கு கையளிக்கவுள்ளதுடன் புகையிரத நிலைய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

அவற்றுடன் புகையிரத சேவையாளர்களுக்கு இருப்பிட வசதி, இயந்திர செயற்பாட்டுத் தளம் உள்ளடங்களாக, 11 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றை அமைக்கவுள்ளதுடன், அமெரிக்கா முதல் முறையாக வழங்கும் 70 மில்லியன் ரூபாய் உதவித்தொகையைக் கொண்டு, பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தி, கண்டியில் வாகன நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.  

பொதுப்போக்குவரத்துத் துறையை மேலும் பலப்படுத்த, அவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான வழிவகைகளை செய்யவுள்ளதாவும் எதிர்காலத்தில் தூய்மையான நகரங்களை உருவாக்க முயற்சித்து, எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

அதேபோல் எல்லை நிர்ணய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தினாலேயே, மாகாணசபைத் தேர்தல்கள் தாமதமாவதாகவும் அதற்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டுமெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X