2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’தொழிற்சங்க ஊடுருவலை அனுமதிக்க முடியாது’

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலிய பிளான்டேஷனுக்குரிய பெருந்தோட்டங்களில், பெருந்தோட்டச் சேவையாளர்களை சிதைக்கும் வகையில், ஒரு தொழிற்சங்கம் அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றதெனக் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், குறித்த தொழிற்சங்கம், தோட்டச் சேவையாளர்களை இடமாற்றம் செய்யுமாறு, தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது, கண்டனத்துக்குரியது என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து, இ.தொ.காவின் உப தலைவரும் சட்டத்தரணியுமான மாரிமுத்து, மஸ்கெலியா பிளான்டடேஷனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தோட்டச் சேவையாளர்களின் விடயத்தில், தொழிற்சங்கங்களின் ஊடுருவலை, எவ்விதத்திலும் நியாயப்படுத்தவோ அல்லது அங்கிகரிக்கவோ முடியாது எனவும், இது கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணானதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மஸ்கெலியா பிளான்டேஷனுக்கு உட்பட்ட ஸ்ரஸ்பி, கிளனுகி, மொக்கா, பிரவுன்ஸ்விக், கிளன்ரில், மரே, பிரன்லோ, மௌசாகெல்ல, ஹபுகஸ்தென்ன, லக்சபான ஆகிய தோட்டங்களில் உள்ள பெருந்தோட்டச் சேவையாளர்களை இடமாற்றுவதற்கான முயற்சியை, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கமொன்று மேற்கொண்டுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு தொழிற்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தோட்டச் சேவையாளர்களை இடமாற்றுவதற்கு, மஸ்கெலிய பிளான்டேஷனுக்கு எந்தவித உரிமையும் இல்லை எனச் சாடிய அவர், கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்டச் சேவையாளர்களை நிர்வாக மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

எனவே, தொழிற்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தோட்டச் சேவையாளர்களை இடமாற்றம் செய்வதற்கு, மஸ்கெலியா பிளான்டேஷன் முயன்றால், பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .