2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தொழிற்சங்கங்கள் விலக வேண்டும்’

Nirosh   / 2019 ஜனவரி 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வருடங்களுக்கு 75 ரூபாய் அதிகரிப்பை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக் தெரிவித்துள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், எனவே, கூட்டொப்பந்தமானது தோல்வி கண்ட முறைமை என அறிவித்து, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து விலக வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில், கூட்டொப்பந்த முறை ஒரு தோல்வியடைந்த முறை என விமர்சித்ததுடன், அரசியல் சித்து விளையாட்டுக்களுக்காக, கூட்டொப்பந்தம் பயன்படுத்த வேண்டாமென்றும் எச்சரித்தார்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்சார் விடயங்களை கூட்டொப்பந்தத்தினூடாக பூர்த்தி செய்ய முடியாது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை அதிகரிக்க, தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதே தீர்வு என்றும் அவர் கூறினார்.  

20 வருடங்களுக்கு மேலாக, ​கூட்டொப்பந்தத்தில் அரசாங்கம் வெறும் அனுசரணையாளராகவே இருந்து வருவதாகவும் இதனை மாற்றுவதற்கு, கூட்டொப்பந்தம் ஒரு தோல்வியான முறை என அறிவித்து, குறித்த தொழிற்சங்கங்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு வெளியேறுவதால், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை அதிகரித்து, ​பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பின்போது, மானியமாக ஒரு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.   

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, சம்பள அதிகரிப்பை வழங்கும்போது, பெருந்தோட்டக் கம்பனிகள், அதன் இலாப நட்டத்தையும், சர்வதேசச் சந்தையில் தேயிலை விலையையும் கருத்திற்கொள்ளாது, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.   

பெருந்தோட்டக் கம்பனிகளால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், வருடம் ஒன்றுக்கு வெறும் 25 ரூபாய் சம்பள அதிகரிப்பு என்பது அநீதியானது எனவும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X