2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொழிலாளர்கள் தொழிலுக்கு திரும்பியுள்ளனர்

Editorial   / 2018 ஏப்ரல் 07 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டம், இன்று (07)  முடிவுக்கு வந்துள்ளது.

குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தோட்டத்தொழிலாளர்களுக்கு உரித்துடைய எந்த சலுகைகளையும் செய்து கொடுக்காது, தொழிலாளர்களிடமிருந்து வேலையை மாத்திரம் பெற்றுக்கொள்வதாகவும், தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காததன் காரணமாக தேயிலை மலைகள் காடாகி வருவதாகவும், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித செவிமடுத்தளுமின்றி செயற்படுவதாகவும், சில தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தி  அவர்களுக்கு தொழில் வழங்குவதாக இழுத்தடித்ததாகவும் இதனால் தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வந்ததாகவும் தொழிலாளர்கள் அதிகாரி மீது குற்றம் சுமத்தினர்.

தொழிலாளர்கள்  தாங்கள் எதிர்நோக்கி  வந்த பிரச்சனைகள்  தொடர்பாக  தொழிலாளர் தேசிய சங்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, நேற்று (06) தலவாக்கலையில்  வைத்து தோட்ட தோட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது.

இதன் காரணமாக  இம்மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிட்டியது. இதனையடுத்து, இன்று
தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .