2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொழிலாளர்கள் பறித்த கொழுந்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், ஆர்.ரமேஸ்

 

ஹட்டன் - செனன் பகுதியில், தொழிலாளர்கள் பறித்த சுமார் 1,440 கிலோகிராம் கொழுந்தின் மீது, மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதால், அப்பகுதியில், நேற்று (6) மாலை பதற்றமான சூழலொன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பணிப்புரைக்கு அமைவாக, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாகப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் ஒரு சில தொழிலாளர்கள், வழமைபோன்று தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹட்டன் செனன் தோட்டத்தில், நேற்றைய தினம் தொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் பறித்த கொழுந்தை, டிரக்டர் வண்டியில் ஏற்றிவரும் போது, இனந்தெரியாத நபர்கள் சிலர் கொழுந்தின் மீது மண்ணெண்ணெயை ஊற்றியுள்ளனர்.

தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில், டிரக்டர் வண்டியை வழிமறித்த சிலர், இவ்வாறான விசமத்தனத்தில் ஈடுபட்டதாக, டிரக்டர் வண்டியின் சாரதி, ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X