2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொழில் முயற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், மத்திய, ஊவா மாகாணங்களில், ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய, இத்திட்டத்துக்கான தொழில் முயற்சியாண்மையாளர்களைத் தெரிவுசெய்வதற்கு சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுயதொழில் தொடர்பான நிதி உதவிகளை, மலையகச் சமூகத்தினரும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து, அ.அரவிந்தகுமார் எம்.பி, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சுயதொழில் தொடர்பான நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அதற்கான அறிவுறுத்தல்களையும் விண்ணப்பப்படிவத்தின் நகல்களையும், மலையக மக்கள் முன்னணியின் பதுளை அலுவலகத்திலும், ஹாலிஎல, வெலிமடை, பசறை, லுணுகலை பிரதேசங்களின் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு, தொழில் முயற்சியாளர்கள் கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் வருமாறு:

1. தனியார் கூட்டு, மற்றும் பங்குடமை முயற்சியாண்மைகளாக இருப்பதுடன் தற்போது நடைமுறையில் காணப்படும் வியாபார முயற்சியாண்மையாகவும், 25.03.2018 அன்று, ஆகக் குறைந்தது 6 மாத காலம் நிறைவடைந்தும் இருத்தல் வேண்டும்.

2. கீழ்க் குறிப்பிடப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்டதும், தெரிவுசெய்யப்பட்ட பெறுமதிசார் சங்கிலித் தொடரினுள் உள்ளடக்கப்பட்ட முயற்சியாண்மைகளையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

• நுவரெலியா உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களைச் சார்ந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் மரக்கறி, பூ வளர்ப்பு, பால்சார் சங்கிலித் தொடர் முயற்சியாண்மைகள்

• ஹாலி-எல, வெலிமடை, பசறை, லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுகளில் மரக்கறி, பூ வளர்ப்பு, பால்சார் சங்கிலித் தொடர் முயற்சியாண்மைகள்.

• மொனராகலை, வெல்லவாய, பிபில, படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவுகளில் மரக்கறி, பால், பழங்கள்சார் சங்கிலித் தொடர் முயற்சியாண்மைகள் கொண்ட பெறுமதி சார் சங்கிலித் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (பால்சார் தொழில் முயற்சி எனப்படுவது, மாட்டுப்பண்ணை செய்கையாளர்கள்)

3. வியாபார வளர்ச்சியில் காணப்படும் வாய்ப்புகளைக் குறிப்பிட்டு காட்டுதல் வேண்டும்.

4. இத்திட்டத்தின் கீழ் வியாபாரத்துக்கு வழங்கப்படும் சொத்தில்/ மூலதன முதலீட்டில், குறைந்தது 10 சதவீதத்தைப் பணமாகப் பங்களிப்புச் செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

5. தொழில் முயற்சியாளர்கள் பின்வரும் வகைக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்: உள்ளீடு வழங்குநர், உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர், பெறுமதிச் சேர்க்கையில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள்.

விண்ணப்பிக்கும் முறை (sub hed)

1. முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை, தேவையான ஆவணங்களுடன் இம்மாதம் 27ஆம் திகதி மாலை 1.00 மணிக்கு முன்பதாக, தங்களது பிரதேச அலுவலகத்துக்கு, பதிவுத்தபால் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ கையளிக்க முடியும்.

2. தொழில் முயற்சியாண்மையாளர் ஒருவர், ஒரு விண்ணப்பப்படிவத்தை மாத்திரமே சமர்ப்பிக்கலாம்.

3. விண்ணப்பதாரர்கள், இது தொடர்பான மேலதிக தகவல்களை மாவட்டக் காரியாலயத்தில் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளரிடம், கீழ்க் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களூடாக, காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

பதுளை: 055-2232685, மொனராகலை: 055 -2277632, நுவரெலியா: 051- 2244905, 055-2231526, 077-3516116, 077-9135793.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X