2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தோட்ட அதிகாரியை இடமாற்றக்கோரி லோகி தோட்ட மக்கள் நேற்றும் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், எந்தவொரு பிரச்சினையும் இன்றியே தோட்டத் தொழிலாளர்கள் பணி புரிந்தனர் என்றும் எனினும் தற்போது பல பிரச்சினைகள் புதிதாகத் தோன்றுவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  

தொழிலாளி ஒருவர், 8 மணிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்றும் ஆனால், 5 நிமிடம் தாமதித்துச் சென்றாலும், அந்தத் தொழிலாளருக்கு அன்றைய தினச் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் தோட்டம் காடாகிக் காணப்படுகின்ற அதேவேளை, தேயிலைக் கொழுந்துகள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்றும் தோட்டத் தொழிலாளர்களால் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.  

தேயிலைக் கொழுந்து பறிப்பதற்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படுவதாகவும் கவ்வாத்து, புல் வெட்டுதல், மருந்து அடித்தல், கான் வெட்டுதல் ஆகியவற்றுக்கு, தற்காலிகக் கொடுப்பனவுகளே வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.  

எனவே, இதுபோன்று காணப்படும் பல பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு வழங்கவேண்டும் என்று தெரிவித்தே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .