2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நகரங்களை விட ’தோட்டங்களே துரித கதியில் அபிவிருத்தி’

Editorial   / 2018 மே 06 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரு தசாப்தங்களாக, கண்டி மாவட்ட தோட்ட மக்கள் கவனிப்பாரற்ற நிலையிலேயே இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஆனால், தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில், நகரங்கள், கிராமபுரங்களைவிட கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட தோட்டங்கள், பாரிய அபிவிருத்தியைக் கண்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

கண்டி, லெவலண்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டத்தை, பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கூறிய அவர், “தேர்தல் காலங்களிலும் தொழிற்சங்கங்களுக்கு ஆள் சேர்க்கும் காலங்களிலும் மட்டும், ஒரு சில அரசியல்வாதிகள் தோட்டப்புறங்களுக்கு வந்துச் செல்கின்றனர். ஆனால் அந்த நிலைமை இன்று முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இன்றைய தேசிய அரசாங்கத்துக்குச் சோதனைகள் பல ஏற்பட்டாலும், தமது சமூகத்துக்கான பணிகளைச் செய்வதில் உறுதியாகச் செயற்பட்டு வருவதாகக் கூறிய அவர், கண்டி மாவட்டத்தின் நகரப்பகுதிகளில், கடந்த காலங்களில், ஒரு வீடமைப்புத் திட்டம்கூட முன்னெடுக்கப்படவில்லை என்றும், கிராமப்புறங்களில் வெறுமனே நான்கு வீடமைப்புத் திட்டங்களே முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தாம், தமது தோட்டப் பகுதிகளை மையப்படுத்தி 15க்கும் அதிகமான வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி வருவதாகக் கூறிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில், நிலங்களை ஒதுக்கீடு செய்து, வீட்டுத் திட்டங்களை ஆரம்பித்து, அவை இன்று பூர்த்தி நிலையை அடைந்திருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் சில மாதங்களில், நாவலப்பிட்டிய, புஸ்ஸல்லாவ, பன்வில, ரன்களை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள், மக்களின் பாவனைக்குக் கையளிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .