2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நகரசபையின் ஆவணங்கள் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத். எச்.எம். ஹேவா

ஹட்டன்- டிக்கோயா நகரபை அலுவலகம் சில நாள்களில் இரவு 9 மணிவரை திறந்திருப்பதால், நகரசபையில் வைக்கப்பட்டிருக்கும் சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதென, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான, அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தான் தவிசாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், நகரசபையின் அலுவலகம் மாலையுடன் மூ​டிவிட்டு, அதன் திறப்பை பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் தற்போது, நிலைமை மாறிவிட்டதாகவும் அலுவலகம் 9 மணிவரை திறந்திருப்பதால், நகரசபையுடன் தொடர்புபடாத வெளியாள்களும் அலுவலகத்துக்கு வருகைத் தருவதால், நகரசபை அலுவலகத்திலுள்ள முக்கிய ஆவணங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் தான் இதற்கு முன்னரும் நகர சபையின் தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், நகர சபையின் தவிசாளர் எஸ். பாலச்சந்திரனிடம் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார் தனது கவனத்துக்குக் கொண்டு வந்ததையிட்டு அலுவலகத்தை நேரத்துடன் மூடி, அதன் திறப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அதிகாரிகள் அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, அலுவலகத்தின் கடமைகள் மாலை வேளை நிறைவடைந்ததன் பின்னர், அலுவலகத்தை மூடி திறப்பை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு, மீண்டும் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .