2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நம்புகிறார் ஜீவன்

Editorial   / 2021 மார்ச் 15 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். கணேசன்
தான், அரசியல் செய்யவில்லை என்றும் நிர்வாகத்தையே முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மலையகத்தை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை தன்னிடமிருக்கிறது என்றார்.  

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று, ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேற்று (14) நடைபெற்றது. 

இந்நிகழ்வில், திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அறம்பேபொல கலந்துகொண்டிருந்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  'தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக, எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். அடிப்படை நாள் சம்பளமாக 1,000 ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதி அளித்ததைப் போன்றுஇ அது நிறைவேற்றப்பட்டுள்ளது' என்றார்.

 எவ்வாறாயினும், 1,000 ரூபாய் பெற்றுக்கொடுத்தமையில் பலரும் பல குறைகளைக் கூறுகின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்கள் இல்லாதுபோய்விடுமென விமர்சிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒரு வருடகாலப்பகுதியில் எம்மால் முக்கியமான சில விடயங்களை நிறைவேற்றமுடிந்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது' எனத் தெரிவித்த அவர், 'மலையகத்தை மாற்ற முடியும்'  என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

'அதனையே எமது இளைஞர்களும் நம்புகின்றனர். நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டாம். வீண் விமர்சனங்களை முன்வைப்பர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .