2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நவீன், வடிவேலுக்கு ருவன்வெல்லவில் எதிர்ப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.ஷான்

கேகாலை, ருவன்வெல்ல பிரதேசத்திலுள்ள பொது​ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றுக்கு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள், ருவன்வெல்ல நகரில், இன்று (5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்களை, தற்போதைய அரசாங்கம், அமைச்சர் நவீன் திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஏமாற்றிவிட்டனர் என்றும் தெரிவித்து, மேற்படி பிரதேச மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர்.

இந்நிலையில், ருவன்வெல்ல பிரதேச மைதானத்தில் இன்று (5) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி, மாலை வரை இடம்பெற்ற நிகழ்வில், அமைச்சர் நவீன், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .