2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’நாட்டின் நீதி சீர்குலைந்துவிட்டது’

Editorial   / 2018 மே 15 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ, மு.இராமச்சந்திரன்

நாட்டின் நீதி சீர்குலைந்துவிட்டதெனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க, சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒருவிதமாகவும் சாதாரண மக்களுக்கு ஒருவிதமாகவும் அமுல்படுத்தப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

தலவாக்கலை சுமன சிங்கள வித்தியாலயத்தில், நேற்று  (14) இடம்பெற்ற, சித்திரம் மற்றும் பத்திரிகைக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், சட்டமும் ஒழுங்கும் சமமான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்களின் விருப்பங்கள், பிரச்சினைகள், அவர்களது தேவைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு செயற்படவுள்ளதாகக் கூறிய அவர், ஐ.தே.கவின் தலைமையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, தேசிய ரீதியில் ஐ.தே.கவின் வெற்றிக்காகப் பாடுபடவுள்ளதாகவும் கூறினார்.

“இதுவரைகாலமும், நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய வேண்டும். இல்லையேல் வீட்டுக்குச் செல்லும் காலம் விரைவில் வந்துவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள், தமது தாய்மொழிக்கும் மேலதிகமாக ஒரு மொழியைத் தெரிந்து வைத்திருப்பது அவசியமென்று கூறிய அவர், நாடளாவிய ரீதியில் ஆங்கிலமொழி பயிற்றப்பட்ட 6,000 ஆசிரியர்கள் சேவையிலுள்ள போதிலும், மாணவர்கள், ஆங்கிலமொழிப் புலமையற்றவற்றர்களாக இருப்பது கவலைக்குரிய விடயமென்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X