2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘நான் யார் என்பதைக் காட்டுவேன்’

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்   

 “ஹட்டன் டன்பார் மைதானத்தில், எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு முக்கிய உரையாற்றவுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானிக்கும் பிரதான கூட்டம் என்பதால், மலையக மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொள்ள வேண்டும். அதில்தான் எனது பலம் என்னவென்று காட்டுவேன்” என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.   

ஹட்டன் இந்திரா விருந்தகத்தில் நேற்று (25) நடத்தப்பட்ட விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,   

“நடைபெறுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெரிய அளவில் செலவு எதுவுமின்ற சாதாரண மக்களும் அரசியலில் பங்கு கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது. எனவே, அந்தந்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று, எமது வேலைத் திட்டங்களை, மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, வாக்குகள் சேகரிக்க வேண்டும்.   

“நாம், தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மலையக அபிவிருத்திக்கு தனியான அபிவிருத்தி சபை அமையவுள்ளது. விரைவில் பிரதேச செயலகங்கள் கிடைக்கவுள்ளன. இந்தச் சாதனைகள், மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட வேண்டும். மக்களை மதித்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்.   

 “ஜனாதிபதித் தேர்தலில் நாம் தான் மலையக மக்களின் அதிகமான வாகுகளைப் பெற்றுக் கொடுத்தோம். எமது வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி வேறு ஒரு கூட்டத்துக்குச் செல்கின்றார். இதுதான் அரசியல் போக்காக இருக்கின்றது.   

 “இம்முறை மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இந்த வாய்ப்பை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X