2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிலுவைத் தொகையுடன் ’ரூ.50 ஐ பெற்றுக்கொடுப்போம்“

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அவசரக்காலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள விசேடப் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், 50 ரூபாயை, நிலுவைத் தொகையுடன் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவசரக்காலச் சட்டத்தை நீடிப்பதுத் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

அவசரக்காலச் சட்டம் அமுலில் இருப்பதால், மலையகத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்கு தொழில் நடவடிக்கைளுக்கு வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் நுவரெலியாவில் சுற்றாலா, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், எனவே, உடனடியாக அவசரக்காலச் சட்டத்த நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத்  தரமுயர்த்துவதுத் தொடர்பில்,  முஸ்லிம்கள் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், விட்டுக்கொடுப்புடன் நடந்துகொண்டால் மாத்திரமே தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ முடியும் எனவும் தெரிவித்தார். குறித்த விவகாரத்தில் மூன்றாந்தரப்பு உள்நுழைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் இராதாகிருஸ்ணனின் கருத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்பிய மஹிந்தானந்த எம்.பி,  குறைந்தது 50 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத நீங்கள் ஏன் இன்னும் இந்த அரசாங்கத்தில் இருக்கிறீர்கள் என்றார். உங்கள் தலைவர் திகாம்பரம் 50 ரூபாய் வழங்கவில்லை என்றால் பதவி விலகப்போதவாகக் கூறினாரே என அவர் வினவியமைக்குப் பதிலளித்த அமைச்சர் இராதா, எனக்கு திகாம்பரம் தலைவர் இல்லை. 50 ரூபாயை நிலுவைத் தொகையுடன் பெற்றுக்கொடுப்போம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X