2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக்கு 340 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ் 

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள, 340 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.  

டிக்கோயா-டன்பார் மேற்பிரிவுத் தோட்டத்தில், அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய, 30 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுள்ள “கொங்ரீட்” பாதையை, பொதுமக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  

மலையக மக்களின், போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் முகமாகவே, அமைச்சர் திகாம்பரம், மில்லியன் கணக்கில் நிதியொதுக்கீடு செய்துள்ளார் என்றும் இதுபோல, பல பாதைகள் விரைவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

ஹட்டன் பகுதியில், இந்த ஆண்டில் மாத்திரம், தலா 7 பேர்ச் காணியில் 400 தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் இதன்மூலம், மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே, அமைச்சர் திகாம்பரத்தின் கனவு என்றும் அவர் கூறினார்.  

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், வீடமைப்பு, குடிநீர், மலசலக்கூடம், உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்துக்குமாக, அமைச்சர் திகாம்பரமும் எம்.பி திலகரும், 340 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளனர் என்றும் இன்னும் மூன்று மாதத்துக்குள், அந்த வேலைத்திட்டங்கள் அனைத்துப் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .