2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுவரெலியா போதனா வைத்தியசாலையில் ஆளணி இல்லை

செ.தி.பெருமாள்   / 2020 ஜூன் 22 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா போதனா வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருவதாக, வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வைத்தியசாலைக்கு, 600 பேர் தேவைப்படுகின்றபோதிலும், 290 பேர் மாத்திரமே பணியில் உள்ளனர் என்றும் எனவே, மேலதிகமாக, 325 பேரை, புதிதாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான வைத்தியசாலையான இதற்கு, நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் மருத்துவத் தேவைகளுக்காக வந்து செல்கின்ற நிலையில், ஆளணிப்பற்றாக்குறையால், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆளணிப்பற்றாக்குறை காரணமாக, புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .