2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுவரெலியா வைத்தியசாலை ஊசி மருந்து விவகாரம் விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட 17 நோயாளர்களுக்கு, குறித்த சத்திரிசிகிச்சையின் பின்னர் ஏற்பட்டுள்ள பல்வேறு நோய்கள் காரணமாக, விசாரணைகளை முன்னெடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நோயாளர்களுக்கு செலுத்தப்பட்ட ஊசியினை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஊசியானது கடந்த 17ஆம் திகதி 55 நோயாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், 17 நோயாளர்களே பல்வேறு நோய்க்கு உள்ளாகியுள்ளதாகவும், இவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவவதாகவும் நுவரெலியா வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஊசி ஏனைய வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான எவ்வித பிரச்சினையும் குறித்த வைத்தியசாலைகளில் ஏற்படவில்லையென தெரிவித்துள்ள சுகாதார சேவை பணிப்பாளர் ஊசியை பரிசோதிப்பதற்காக, தேசிய ​ஒளடதங்கள் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .