2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நுவரெலியா வைத்தியசாலை கட்டடம் ஜனாதிபதியால் இன்று அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்.ரமேஸ், சுதத் எச்.எம்.ஹேவா

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை கட்டடம் ஜனாதிபதியால், இன்று (15) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டபிள்யூ.ஆர்.எம். மஹேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.  

சுமார் 7 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தில், 600 கட்டில்களை உள்ளடக்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வார்ட் பிரிவு, மேலும் 20 வாட்கள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.  

இந்த வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவரும் பழைய வைத்தியசாலை, தொடர்ந்தும் இயங்கி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகப்பேற்று விடுதியைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவுகளும் புதிய கட்டடத்துக்கு இடமாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அழைப்பின் பேரில், அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டு உயர்ஸ்தானிகர் ஜோன் டர்ன்வார்ட் ஆகியோரும் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.    

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X