2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுவரெலியாவில் 2237 வேட்பாளர்கள் களத்தில்

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 2237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சுயேட்சை கட்சிகள் பலவற்றில் இவர்கள் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 2016 மக்கள் புள்ளிவிபரப்படி 7,11,644 மக்கள் வசிப்பதாகவும், இதில் 5,62,188 பேருக்கே வாக்குரிமை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 504  தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாநகர சபைக்கு 17 மத்திய நிலையங்கள் ஊடாக 18516 பேரும், ஹங்குராங்கெத்த பிரதேசசபைக்க 72 மத்திய நிலையங்களில் 73,642 பேரும், வலப்பனைன பிரதேசசபையில் 92 மத்திய நிலையங்களில் 85881 பேரும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

லிந்துலை- தலவாக்கலை நகர சபையில் 5 மத்திய நிலையங்களில் 3933 பேரும், நுவரெலியா பிரதேசசபையில் 38 மத்திய நிலையங்களில் 48,682 பேர் வாக்களிக்க தகுதி  பெற்றுள்ளனர்.

அம்பகமுவ பிரதேசசபையில் 48 தேர்தல் மத்திய நிலையங்களில் 51,421 ​பேரும், கொத்மலை பிரதேசசபைக்கு 89 மத்திய நிலையங்களில் 82,139 பேரும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

நோர்வூட் பிரதேசசபைக்கு 41 மத்திய நிலையங்களில் 8854 பேரும், மஸ்கெலிய பிரதேசசபைக்கு 30 மத்திய நிலையங்கள் ஊடாக 37,827 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா நகரசபைக்கு 6 மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதுடன், 9801 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும், கொட்டகலை பிரதேசசபைக்கு 33 மத்திய நிலையங்களில் 44423 பேரும், அக்க​ரப்பத்​தனை  பிரதேசசபையில் 31 மத்திய நிலையங்களில் 43,906 வாக்களர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .