2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுவரெலியாவில் அதிகரிக்கும் விபத்துகள்

Gavitha   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை, நானு-ஓயா ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று (06) மாலை மற்றும் இரவில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதெல்ல குறுக்கு வீதியில், ஈஸ்டல் தோட்டப் பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஓட்டோவில் பயணித்த இருவரில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி, இன்று (07) காலை உயிரிழந்துள்ளார்.

ஈஸ்டல் தோட்டத்தைச் சேர்ந்த சவரிமுத்து இராயப்பன் என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் ஓட்டோ சாரதி, கையொன்று முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கனரக லொறியொன்றின் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்,  இராகலை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் பகுதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், குழந்தை உட்பட மூவர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர்.

நுவரெலியாவில், பனியுடன் கூடிய வானிலை நிலவுகின்றமையால், தொடர்ந்து விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே, சாரதிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.                     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .