2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுவரெலியாவில் இடி, மின்னலுடன் கடும் மழை

Editorial   / 2018 மே 06 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

நுவரெலியா பிரதேச பகுதிகளில் இன்று (06) மதியம் முதல், பலத்த இடி, மின்னலுடன் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பொது மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள, உலோக பொருட்கள் மற்றும் கைபேசி பாவனைகளில் இருந்து, சற்று விலகியிருக்குமாறு நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்துவோர், மிக அவதானமாக செல்லும் அதேவேளை, பாதசாரிகளும் மிகுந்த அவதானத்தோடு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மண்மேடுகள் காணப்படும் பகுதிகள், நீரோடைகள் மற்றும் ஆற்று ஓரங்களில் குடியிருப்போரும், பாரிய மரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

இதேவேளை, கந்தப்பளை  கல்பாலம் புது வீதி பகுதியில், ஆற்று நீர் பெருக்கத்தால் பிரதான  வீதி மூழ்கியுள்ளதால், கந்தப்பளை, நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து, தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .