2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நூரளை செல்கிறார் ம.வி.மு தலைவர்

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, மார்ச் மாதம் 1ஆம் திகதி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நுவரெலியா மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார். 

இவர், நுவரெலியா, நானுஓயா, அக்கரபத்தனை, ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேசங்களுக்கு, விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  

தொடர்ந்து மூன்று நாள்கள் நுவரெலியாவில் தங்கியிருக்கவுள்ள இவர், தோட்டப்புறங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு, மக்களது குறைகளை ஆராயவுள்ளதாக, இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்க நிதி காரியதரிசி கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். 

அந்த வகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலைமை, சம்பள உயர்வின்றி இம்மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள், தேசிய அரசியலில் தொழிலாளர்களின் பங்களிப்பு, இவர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பில் மக்களைச் சந்திக்கவுள்ளதாகவும் ஆலய வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

இங்கு மக்களுடன் கலந்துரையாடி பெறப்படுத் தகவல்களை, அரசாங்கத்தின் உயர் பீடத்துக்குக் கொண்டுச் சென்று, இவை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளும், இவருடைய விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதேசசபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், தோட்ட கமிட்டிகள் ஆகியோர்களுக்கிடை யிலான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .