2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நூரளை, பதுளையில் நிலங்கள் குலுங்கின

Editorial   / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஸ்
நுவரெலியாவிலும் பதுளையிலும் நேற்று (31) சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தில், சிறியளவிலான நிலநடுக்கமொன்று, நேற்று (31) காலை உணரப்பட்டுள்ளதாக, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
 
2.0 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
 
இதேவேளை, பதுளை, லுணுகல பிரதேச செயலாளர் பிரிவில், ஏகிரிய மற்றும் அதனோடிணைந்த கிராமங்கள் சிலவற்றிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதுதொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளனர்.
 குறுகிய சில நாள்களுக்குள் இவ்வாறான நில அதிர்வுகள் பல உணரப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் ஆகியவை விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
லுணுகல பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 22ஆம் திகதியும் இவ்வாறான நில நடுக்கங்கள் மூன்று தடவைகள் உணரப்பட்டுள்ளன. எனினும், இத்தகைய நிலநடுக்கங்களால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
'எவ்வாறெனினும், நில அதிர்வு தொடர்பில் முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கான இயலுமை இல்லை; மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பதற்கான இயலுமை இல்லை. ஆகையால், நில அதிர்வுகள் உணரப்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுக்க முடியும்' என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, பதுளை, லுணுகல பிரதேசத்தில் நேற்று (31) உணரப்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவில் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .