2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நூரளை மாவட்டத்துக்கு ரூ.1,500 மில்லியன் ஒதுக்கீடு

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்கென அரசாங்கம், 1,500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதேவேளை  இந்நிதியானது, ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு, தலா, 187 மில்லியன் ரூபாய்  வீதம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா லோவர்சிலீப் தோட்டத்தில், 10.5 மில்லியன் ரூபாய் செலவில், செப்பனிடப்பட்ட பிரதான வீதியின் திறப்பு விழா, நேற்று (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

வருட இறுதிக்குள் தேர்தலொன்றை எதிர்கொள்ள நேரிடுமென்றும், அந்தவகையில் முதலாவதுத் தேர்தலாக மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமேயானால், அந்தத் தேர்தலில், மத்திய மாகாண சபைக்கு, நுவரெலியா மாவட்டத்திலிருந்து அதிகப்படியான தமிழ் பிரதிகளை தெரிவு செய்து அனுப்புவதற்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் பிரதநித்துவத்தை அதிகரிக்கும் பட்சத்தில்,  அரசாங்கம் கூடுதலான நிதிகளை ஒதிக்கீடு செய்யும் எனவும் அதனூடாக பெருந்தோட்ட பிரதேசங்களில் பின்தங்கிய அபிவிருத்திகளை முன்னெடுக்க  முடியுமென்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியினூடாக, தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளுக்கும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்தவகையில், கம்பெரலிய திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகளை, இவ்வருட இறுதிக்குள் முடிக்க உள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X