2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நெருக்கடிக்கு மத்தியில் உறுப்பினர்களுக்குச் சலுகை

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே, அம்பன்கஹகோரள பிரதேச சபை இயங்கி வருவதாகத் தெரிவித்த, அச்சபையின் முன்னாள் தவிசாளர் சுனில் விஜேதிலக, பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளினூடாக, மக்களின் பணமே வீண்விரயமாக்கப்படுகிறதெனவும் விமர்சித்தார்.

அம்பன்கஹகோரள பிரதேச சபையின் மாதாந்த வருமானம், இரண்டரை இலட்சம் ரூபாய் என்று தெரிவித்த அவர், எனினும் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்ட 16 உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த ஊழியம், மூன்று இலட்சம் ரூபாயையும் தாண்டுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தற்போதைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமையாலேயே, இந்தத் தொகையை, பிரதேச சபையின் உறுப்பினர்களுக்குச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதென விமர்சித்த அவர், அம்பன்கஹகோரள பிரதேச சபை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிலைமையை எதிர்கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

“பிரதேச சபையின் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, உறுப்பினர்கள் அனுமதி கோருகின்றனர். எனினும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நிலையில், சபை இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த வருமானத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றமாக, அம்பன்கஹகோரளய பிரதேச சபையே காணப்படுகின்றது. இந்தச் சபையைக் கொண்டு நடத்துவதற்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்றார்.

மக்களிடமிருந்து நீர்க் கட்டணமும் குறைவாகவே கிடைப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு அனுமதிப்பத்திரங்களுக்கு ஊடாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே சபையை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலை நீடிக்குமாயின், இந்தச் சபையை மூட வேண்டிய நிலை ஏற்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

சபைக்குக் கிடைக்கும் பொது நிதியினூடாகவே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு முற்கொடுப்பனவு, கூட்டங்களுக்கான கொடுப்பனவு, அலைபேசிக் கட்டணம், எரிபொருள் மானியம் போன்ற சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதெனத் தெரிவித்த அவர், பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாகவே, இத்தகைய சலுகைகளை தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

“சபையின் தவிசாளராக நான் இருந்த காலத்தில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். எனினும் அந்தத் திட்டங்கள் அனைத்தும், இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X