2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நெற் செய்கை பாதிப்பு

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜூன் 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

​கண்டி ஹரிஸ்பத்துவ பிரதேச சபை எல்லைக்குட்பட்ட யடிஹலகல பிரதேசத்திலுள்ள ஐந்து அணைக்கட்டுகள் பழுதடைந்துள்ளமையால், போதியளவு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல், சுமார் 100 ஏக்கர் வயல் காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது என, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கண்டி மாவட்டத்தின் பலமை வாய்ந்த விவசாயக் கிராமமாகக் கருதப்படும் இப்பகுதியில், சுமார் 500 ஏக்கர்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தப் பயிர்ச் செய்கைகளுக்காகவே, பல அணைக்கட்டுகள், கால்வாய்கள் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தக் கால்வாய்கள், பல ஆண்டுகள் பழமையானவை என்பதால், நெற்பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக, ஹரிஸ்பத்துவ பிரதேச சபையின் பொது ஜன பெரமுன உறுப்பினர் விஜித குமாரவிடம் வினவியபோது, அணைக்கட்டுகள் பழுதடைந்துள்ளமையால், சுமார் 100 ஏக்கர் வயற் காணகளில்  நெற்  செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால், பழுதடைந்துள்ள கால்வாய்களை உடனடியாக திருத்திக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X