2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பதுளை அதிபர் விவகாரம்; ஏழு பேருக்கு நோட்டீஸ்

Editorial   / 2018 ஜனவரி 24 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, அச்சுறுத்தி முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஏழுபேருக்கு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகளை ஆணைகுழுவினால், நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாளை  (25) காலை 10 மணிக்கு ஆஜராகுமாறே, அந்த ஏழு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண  கல்வியமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வல, மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்னாயக்க, வலயக் கல்விப் பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சபையின் ஊழியர்கள் மூவர் ஆகியோருக்கே நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் என்ற​டிப்படையில், அதிபர் ஆர். பவானிக்கும், முறைப்பாட்டாளர்கள் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X