2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பதுளை போராட்டத்துக்கு நாம் ஆதரவு’

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

அதிபர் ஒருவரை அவமானப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளையில் இன்று (15) இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு, பூரண ஆதரவளிக்கவுள்ளதாக, இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.  

பதுளை மாவட்டத்தில் உள்ள மகளிர் வித்தியாலயம் ஒன்றின் அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சர், தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து, முழங்காலிட வைத்து அவமானப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  

இந்த விவகாரம் தொடர்பில், சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

 “பாடசாலைகளில் முதலாம் தர அனுமதியில் கல்வி அமைச்சின் சுற்றுநிருபமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சுற்றுநிருபத்துக்கு முரணாக மாணவர்களை, அரசியல்வாதிகளின் சிபாரிசுகளின் பேரில் அனுமதிப்பதற்கு சுற்றுநிருபத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 

 “இருந்தும், பதுளை மாவட்டத்தில் உள்ள மகளிர் வித்தியாலய அதிபர் ஒருவரை, தன்னுடைய உத்தியோபூர்வ வாசஸ்தலக்குக்கு அ​ழைத்த ஊவா மாகாண முதலமைச்சர், கல்வி உயர் அதிகாரிகளின் முன்னிலையில், அச்சுறுத்தி அவமானப்படுத்தியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த உயர் அதிகாரிகள் மௌனம் சாதித்திருந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 “இது சம்பந்தமாக கல்வி சமூகம் அரசியல், தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X