2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதுளை மாவட்டத்தில் 10,992 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் இல்லை

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

 

பதுளை மாவட்டத்தில்  10,992 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

பதுளை மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம்,  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திர விஜேசிறி ஆகியோரின் இணைத் தலைமையில், திங்கட்கிழமை (15) நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பதுளை மாவட்டத் திட்டமிடற் பணிப்பாளர் எம்.கே.டியுசன், பதுளை மாவட்டத்தில் 10,992 குடும்பங்கள், மலசலகூட வசதியின்றி வாழ்ந்து வருவதாகவும்  இக்குடும்பங்களில் 4,389 பேர் தற்காலிக மலசலகூடங்களையே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மலசலகூடப் பிரச்சினையை நிவர்த்திப்பதற்கு, கடந்த பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும் இதுவரை அந்நிதியைத் தாம் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.  

இந்நிலையில், இவ்விடயத்தை நீர்வழங்கல் வடிகால் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.மு.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .