2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பதுளைக்கு 11 வேண்டும்’

எம். செல்வராஜா   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “பதுளை மாவட்டத்தில் ஒன்பது தேர்தல் தொகுதிகளை 11தேர்தல் தொகுதிகளாக அதிகரிப்பதற்கு, மாகாண சபை எல்லை நிர்ணயக் குழுவிடம், ஊவா மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தீர்மானித்துள்ளர்” என, ஊவா மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் ஜயந்த கன்னங்க தெரிவித்தார். 

இது குறித்து, ஊவா மாகாண சபை அலுவலகத்தில் திங்கட்கிழமை (11) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“மாவட்டத்தின் பூமிப் பிரதேசம், மக்கள் தொகை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு, பதுளை மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

“தற்போது செயற்பட்டு வரும் தொகுதிப்பிரிப்பின் பிரகாரம் ஹாலி-எல, வியலுவ, ஊவா- பரணகம மற்றும் பசறை ஆகிய தொகுதிகளின் பின்தங்கிய பகுதிகளின் மக்கள் தத்தம் தேவையைக் கருதி அவ்வப் பிரதேச செயலகங்களை நாடவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அவர்கள் வெவ்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கடந்தே, தத்தமக்குரிய பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. இதனால், அவர்கள் காலம் மற்றும் பண விரயங்களை செலவு செய்வதுடன், பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது. 

“எதிர்வரும் காலங்களில், ஊவா மாகாண சபை தேர்தலை புதிய முறையிலேயே நடாத்த, அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆகையால், பதுளை மாவட்டத்தில், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு எல்லைகளை நிர்ணயம் செய்து, நடைமுறையிலுள்ள 09 தொகுதிகளை 11 தேர்தல் தொகுதிகளாக மாற்றியமைக்க வேண்டும். இது காலத்தின் அவசியமாகவும் இருந்து வருகின்றது” எனத் தெரிவித்தார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .