2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதுளையில் நில அதிர்வு; ஆய்வுகள் ஆரம்பம்

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம். செல்வராஜா, ஆறுமுகம் புவியரசன்

பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் (16) உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான ஆய்வுப் பணிகளை, புவிச் சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.  

பதுளை, பசறை, ஹாலிஎல, சொரணாதொட்ட, கந்தகெட்டிய, எல்ல, பண்டாரவளை, வெலிமட ஆகிய பிரதேசங்களில், நேற்று முன்தினம் (16) காலை, நில அதிர்வு உணரப்பட்டது.  

காலை 8.15க்கும் 8.20க்கும் இடைப்பட்ட நேரத்திலேயே, இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் யூ.எம்.எல். உதயகுமார தெரிவித்தார்.  

இதன்போது, சில பிரதேசங்களில் பாரிய அதிர்வு உணர்ப்பட்ட போதிலும், மேலும் சில பிரதேசங்களில், கபாரிய சத்தத்துடன் சிறியளவில் அதிர்வை உணர்ந்தததாகவும் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.  

பாரிய சத்தத்துடன் கூடிய அதிர்வு காரணமாகப் பதற்றமடைந்த மக்கள், தமது வீடுகளில் இருந்து வெளியே வந்து அவலக்குரல் எழுப்பியதாகவும், உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.  

இவ்விடயம் தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளும் முகமாக, புவிச் சரிதவியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தாம் அறிவித்துள்ளதோடு அவர்கள், நில அதிர்வு இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் கூறிய அவர், இருப்பினும் இந்த நில அதிர்வால், எவ்விதச் சேதங்களும் ஏற்படவில்லை என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .