2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பத்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்’

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

“மலையக இளைஞர்கள், கொழும்பு போன்ற நகர் பகுதிகளில், அன்றாடம் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்” என்றுத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சண்முகம் திருச்செல்வம், அதனை நிறைவேற்றவே நாடாளுமன்றத் தேர்தலில் களமிங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பூண்டுலோயா-  ஹெரோ தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“கொழும்பு போன்ற நகர் பகுதிகளில் பணியாற்றிய பலர், கொரோனா காலத்தில் சொந்த ஊர்களுக்கு வந்து தங்கிவிட்டார்கள். மூன்று மாதங்களாக அவர்களுக்கு வருமானம் இல்லை. பணியாற்றிய நிறுவனங்களில் எதுவிதமானக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை. எனவே, எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்றியமைத்து, நிரந்தர வருமானத்துக்கு வழியேற்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
“இளைஞர், யுவதிகள், சுயதொழில்களில் ஈடுபடுவதென்றாலும் அவர்களுக்குத் தமது வியாபாரத்தைப் பதிவுசெய்துகொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. நிரந்தர முகவரியோ, வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கான கட்டடமோ இல்லாததால், பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, எதிர்காலத்தில் மலையகம் வாழ் சகல இளைஞர், யுவதிகளின் நிரந்தர வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

“நுவரெலியாவில் மாத்திரமன்றி, மலையக மக்கள் வாழ்கின்ற அனைத்துப் பகுதிகளுக்கும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது மாத்திரமன்றி இலங்கையெங்கும் உள்ள தமது உறவுகளுக்காகப் பாடுபடத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X