2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பனியுடனான வானிலை காரணமாக தேயிலை கொய்வதில் சிக்கல்

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

லங்கம் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும், அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி பிரிவுக்குரிய சென். ஜோர்ஜ் தோட்டத்தில், தற்போது நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக, பல ஏக்கர் கணக்கான தேயிலைச் செடிகள் கருகியுள்ளனவென, தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், இதன் காரணமாக, அத்தோட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பல மாதங்களுக்கு, தம் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதெனவும் அவர் கூறினர்.

மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில், அதிகாலை பெய்துவரும் பனியால், தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன எனவும், இதனால், தோட்ட நிர்வாகத்தினால், தினமும் பறிக்கக் கூறும் 18 கிலோகிராம் தேயிலையைப் பறிக்கமுடியாமல் போகிறது எனவும், தோட்டத் தொழிலாளர்கள் கூறினர்.

மேலும், 18 கிலோகிராம் தேயிலையைப் பறித்துக் கொடுத்தாலே, முழு நேரச் சம்பளம் வழங்கப்படும் என்று, தோட்ட நிர்வாகம் கூறுகிறது எனக் குற்றஞ்சாட்டிய மக்கள், பனியுடன் கூடிய இவ்வானிலை, சாதாரண நிலைக்கு வரும் வரைக்கும், அரசாங்கம், தமக்கான நிவாரண உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .