2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பற்றைக்காடுகள் தீ வைக்கப்படுவதற்கு சிறுத்தை நடமாட்டமே காரணம்

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்  

 

வட்டவளை மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலுள்ள பற்றைக் காடுகளுக்குள், சிறுத்தைகள் பதுங்கியிருப்பதாக அச்சங்கொண்டு, பாதுகாப்பு நிமித்தம், பற்றைக் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தோட்டப்புறங்களில், மலையுச்சிகளின் குடியிருப்புகளைச் சுற்றிக் காணப்படும் பற்றைக் காடுகளில், சிறுத்தைகள் மறைந்து வாழ்வதாக, பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்றும் இதன் காரணமாகவே, பாதுகாப்பு நலன் கருதி, தீ வைக்கும் சம்பவங்கள், அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இரவு நேரங்களில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் காணாமற்போவதும் மலைப் பிரதேசங்களில் வேலைசெய்யும் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்குவதுமாக, இந்த அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக, தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

தற்போது காணப்படும் வரட்சியான வானிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்தத் தீ வைப்புச் சம்பவங்கள் காரணமாக, காடுகளில் வசிக்கும் பூச்சியினங்கள், வேறு உயிரினங்களும் அழிந்து போகக்கூடிய நிலை ஏற்படுகின்றது.  

பிரதேச மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, சிறுத்தை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .