2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பலாங்கொடையில் 640 பேருக்கு தனிமைப்படுத்தல்

சிவாணி ஸ்ரீ   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து, பலாங்கொடைக்கு வருகை தந்த 640 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 200 பேர், 14 நாள்களை நிறைவு செய்துள்ளனர் என்றும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கொரோனா ஒழிப்புக் குழுவின் குழுக் கூட்டம்,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், பலாங்கொடை பிரதேச செயலகத்தில் இன்று (08) நடைபெற்றது. இதன்போதே, இவ்விடயம் குறித்து எடுத்துக்காட்டப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட 640 பேரில், வெளிநாடுகளிலிருந்து பலாங்கொடைக்கு வந்த 103 பேர் உள்ளடங்குகின்றனர் என்றும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில், பலாங்கொடை பிரதேச மக்கள், அதிகாரிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும்,  மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை  விநியோகிப்பது குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .