2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பழிவாங்கும் படலம்; என்பீல்ட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்பீல்ட் தோட்டத்தின் இரு பிரிவுகளைச் சேர்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் இருவர், தோட்ட நிர்வாகத்தால் பழிவாங்கப்படுவதாகத் தெரிவித்து, மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஹட்டன் நகரில் நேற்று(17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று கோரி, கடந்த வருடம் டிசெம்பர் மாதம், மேற்படித் தலைவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த இருவரும், தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லும் கொழுந்தை கொண்டு செல்லவிடாது தடுத்துள்ளதுடன், இவ்விருவரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனரெனத் தெரியவருகிறது.  

இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம், அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளதோடு, அவர்களை பணிநீக்கமும் செய்துள்ளதாகத் தெரிவருகிறது. 

தோட்ட நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்தே, ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஆர்ப்பாட்டக்காரர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கியப் பதாதைகளை ஏந்தியவாறும் எதிர்ப்புக் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சோசலிச சமத்துவ கட்சியினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தோட்டத் தலைவர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தும், இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என, போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அவர்கள் மீதான வழக்குகளை, தோட்ட நிர்வாகம் வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தியும் இவ்விடயத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் தலையிட வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .