2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Editorial   / 2019 மே 17 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீ.பிரசாந்த்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ்,  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினூடாக டன்சினன் பகுதி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ரத்னம் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

டன்சினன் இலக்கம் 1 பாடசாலையின் மைதான அபிவிருத்திக்காக  20 இலட்சம் ரூபாய் நிதியும் டன்சினன் வடக்கு பிரிவு (அக்கரமலை) பாடசாலைக்கு 5 இலட்சம் ரூபாயும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 5 இலட்சம் ரூபாய் செலவில் பாதுகாப்பு வேலியும்  அமைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X