2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாலுடன் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகின

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், எஸ்.கணேசன்

பால் ஏற்றிச் சென்ற பௌசர் வாகனமும் சிறிய ரக பாரவூர்தி வாகனமும் நோர்வூட் நகர் மற்றும் பொகவந்தலாவையில் விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்துகள் தொடர்பில் தெரியவருவதாவது,

நோர்வூட் நகரில் இருந்து கொழும்புக்கு பால் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பௌசர் வாகனம், நேற்று (04) காலை 10.15 மணியளவில், நோர்வூட் நகரத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக் காரணமாக, மேற்படி வர்த்தக நிலையம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ தினம், சுதந்திர தின விடுமுறை ஆகையால், குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்தது. எனவே, எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .

இதேவேளை, பொகவந்தலாவையில் இருந்து மோரா தோட்டப் பகுதியை நோக்கிச் சென்ற சிறிய ரக பாரவூர்தியொன்று, நேற்று முன்தினம் (03) காலை 09.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பாரவூர்தி, பால் சேகரிப்பதற்காக பொகவந்தலாவை, டின்சினிலிருந்து மோரா தோட்டப் பகுதியை நோக்கிச் சென்ற போது, பாரவூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாரவூர்தியைத் செலுத்திய சாரதிக்கும் அவருடன் பயணித்தவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துகள் தொடர்பில், குறித்த நகரங்களுக்குப் பொறுப்பான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .