2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பின்வரிசை எம்.பிக்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பின்வரிசை எம்.பிக்கள், முழுமையாக ஓரங்கட்டப்படும் முறைமை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்தவண்ணம் உள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டியில், நேற்று (13) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ​தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், சர்வ வல்லமைப் படைத்தவர்கள் என்றும் அவர்கள் நினைத்தால், வானத்தைக் கூட வளைத்து விடலாம் என்றும், எம்மில் சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் என்று கூறிய அவர், அதனால்தான், ஒட்டுமொத்த அரசாங்கமும் இணைந்து செய்யவேண்டிய வேலையை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளுக்கு, நாடாளுமன்றத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பாக, பின்வரிசை எம்.பிக்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பின்வரிசை எம்.பி.யொருவர் என்றடிப்படையில், தேசிய அரசியலிலும் நாடாளுமன்றத்திலும், பல சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளதாகவும் ஓர் அபிவிருத்தித்திட்டத்தை முன்னெடுப்பதற்குக் கூட, பல தடைகளைத் தாண்டிவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

'சிஸ்டம்' சரியில்லை என, அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துவிடவும் முடியாது என்றும் 'சிஸ்டம்' மாறவேண்டும் என்றும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X