2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’புடவைக் கைத்தொழில் புத்துயிர் பெரும்’

சிவாணி ஸ்ரீ   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரியில் மூடப்பட்டுள்ள புடவை கைத்தொழில் பயிற்சி நிலையத்தை கூடிய விரைவில் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

மேற்படி மூடப்பட்டுள்ள கைத்தொழில் பயிற்சி நிலையத்தை, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, நேற்று (27) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்நாட்டு தேசிய புடவைக் கைத்தொழில் உற்பத்திகளுக்கு சிறந்த பெறுமதியைப் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அத்துடன் புதிதாக புடவை கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கூறினார்.

சப்ரகமுவ மாகாணத்தில் புடவை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .