2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'புதிய அரசமைப்பை ஏற்படுத்த இதுவே சந்தர்ப்பம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

புதிய அரசமைப்பை ஏற்படுத்தி, அதற்கூடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு, இதுவே சிறந்த காலம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புக்கான தேசிய அமைப்பு, இரத்தினபுரியில், நேற்று (19) நடத்திய விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும், பல அரசமைப்புகளை முன் வைத்தன என்றும், எனினும் ஒரு கட்சி முன்வைத்த அரசமைப்பு முன்மொழிவுகளை, மற்றைய கட்சி எதிர்த்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் செயற்பாடு மாறிமாறி தொடர்ந்த நிலையில், இதனால், மக்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது இரு கட்சிகளும், தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில், இதனால் தற்போதைய நல்லாட்சியிலேயே, புதிய அரசமைப்பை முன்வைத்து தீர்வு காணப்படுவது அவசியம் வேண்டும் என்றும், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால், பின்னர் நமக்கு சரியான தீர்வு கிட்டாது போய்விடும் என்றும் தெரிவித்தார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்புக் குறித்த யோசனைகள், முற்றுமுழுதாக தென் பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டனவெனச் சுட்டிக்காட்டிய அவர், இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்களின் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“எனினும் தென் பகுதியிலுள்ள 6 மாகாணங்களின் முதலமைச்சர்கள், தமது கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதில் ஒருவர் எழுத்துமூலம் முன்வைத்த கருத்தில், ஆளுநர் பதவியை இல்லாதொழிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .