2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை; இன்று விவாதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் 200 வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்தித் துறைகளில் தொழில் புரியும் மக்களின் வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் மேற்படி அதிகாரசபையை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சு இந்த ஆணைக்குழுவை நிறுவத் தீர்மானித்துள்ளது.

புதிய கிராமங்களை அமைப்பதற்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு சரியான முறையில் முகம்கொடுக்கும் நோக்கிலேயே இந்த அதிகாரசபை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறித்த அதிகார சபையை நிறுவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு, அதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

என​வே இன்று மேற்படி சட்டமூலத்தின் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை எனவழைக்கப்படவேண்டியதும் அறியப்படுவதுமான அதிகார சபையொன்றைத் தாபிப்பதற்காகவும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக “பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை” எனும் சட்டமூலத்தை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி சபையின் பிரேரித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X