2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய மற்றும் பிரதி மேயர்களாக பிரசன்ன, அசித ரங்கே தெரிவு

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வாஹிட் குத்தூஸ்

பதுளை மாநகர சபை, இம்முறை பொதுஜன பெரமுன மற்றும் ஐ.ம.சு. முன்னணி வசமானது. பெரும் எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில், பதுளை மாநகர சபைத் தெரிவு, ஊவா உள்ளூராட்சி மன்ற ஆணையாளர், மங்கள விஜேநாயக்க தலைமையில், பதுளை மாநகர சபை சைமன் பீரிஸ் மாநாட்டு மண்டபத்தில், நேற்று (28) நடைபெற்றது.

இதன்போது மேயர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்ரீ.பொ.பெரமுன கட்சியை சேர்ந்த பிரியந்த அமரசி 12 வாக்குகளையும், ஐ.தே.க.வின் முன்னாள் மேயர் ஹேமச்சந்திர 3 வாக்குகளையும், பெற்றுக்கொண்டனர். இதில் புதிய மேயராக பிரியந்த தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் பிரதிமேயர் பதவிக்கு போட்டியிட்ட ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் பிரதிமேயர் அசித ரங்கே நளின்த (மஞ்சு) 12 வாக்குகளையும், ஐ.தே.கட்சியின் அசார் ஜெய்லாப்தீன் 3 வாக்குகளையும் பெற்று, “மஞ்சு” மீண்டும் பிரதிமேயரானார்.

அந்த வகையில், பதுளை மாநகர சபைக்கு ஐ.தே.கட்சியில் 3 பேரும், பொதுஜன பெரமுனவில் 8 பேரும், ஐ.ம.சு.முன்னணியில் 5 பேரும், ஜே.வி.பியில் 3 பேரும் தெரிவாகியிருந்தனர். ஐ.தே.க.வின் முன்னாள் மேயர் ஹேமச்சந்திர, உறுப்பினர் அசலவுடன் சிறுபான்மை, உறுப்பினர்களான நசீர், சுரேஷ், ரவி, அஸார் ஆகிய ஐவரும் மீண்டும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் ஐ.ம.சு.மு. மேயர் இருமுறை தொடராக பதவி வகித்தவர் என்பதோடு, சட்டத்தரணி உபாலி நிசங்க குணசேகர இம்முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. அத்துடன், ஐ.ம.சு. முன்னணியில் பிரதி மேயராகவிருந்த நாலக இம்முறை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டிருந்தும் உறுப்பினராகத் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .