2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதையல் தோண்டிய அறுவருக்கு விளக்கமறியல்

ஆ.ரமேஸ்   / 2019 மார்ச் 04 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிதுறுதலாகல பாதுகாப்பு வனப் பிரதேசத்துக்குச் சொந்தமான தரிசு நிலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும், எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர, நேற்று (03) உத்தரவிட்டார்.  

கந்தப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கோட்​லோஜ் தோட்ட மேல் பிரிவில், பிதுறுதலாகல பிரதேசத்தையொட்டிய பகுதியில், நேற்று முன்தினம் (02) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த இடத்தில் புதையல் தோண்டுவதாக, 119 அவசர பொலிஸ் இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களிடமிருந்து, புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதி நவீன ஆயுதங்கள், மின்சாரம் பெறும் வயர்கள், கடல் மணல், கலர் நூல்கள், தேசிக்காய்கள், சில கற்கள், கல்லுடைக்கும் ஆயுதங்கள், வான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

ஆரம்பத்தில் மூவர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர் என்றும் அங்கிருந்து தப்பிச் சென்ற ​மூவர், நேற்று முன்தின் இரவே கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X