2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய அறுவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், டி.சந்ரு

நுவரெலியா, பிதுறுதலாகல பாதுகாப்பு வனப் பிரதேசத்துக்கு சொந்தமான தரிசு நிலப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அறுவரையும் வெள்ளிக்கிழமை (08) வரை, தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத் ஜெயசேகர, நேற்று முன்தினம் (05) உத்தரவிட்டார்.

மேற்படி இடத்தில், புதையல் தோண்டப்படுவதாக அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த கந்தப்பளை பொலிஸார், மேற்படி அறுவரையும் கைதுசெய்யததுடன், புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அதி நவீன ஆயுதங்கள், மின்கம்பிகள், கடல் மணல், பூஜைப் பொருட்களையும் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .