2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘புஸ்பா’வுக்கு தொண்டா பரிசு

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விடயம், மலையக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மலையக மக்களுக்கும் தங்களுடைய தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தட்டிக்கேட்டும், இராஜதந்திர அணுகுமுறைகளின் மூலமாகவும் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்த தொண்டமான், பழத்தட்டுடன் சென்றவிடயம், சகலரையும் சற்று வியக்கவைத்துள்ளது.   

எனினும், அவருடைய அரசியல் முதிர்ச்சியையும் இராஜதந்திரத்தையும் அணுகுமுறையையும் இந்தச் செயல் எடுத்துக் காட்டுவதாகவும் பரவலாகப் பேசப்படுகின்றது.   

என்றாலும், காங்கிரஸை, எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்குப் பழத்தட்டுடன் போனது ஏன் என்று, புரியாத புதிராகவே இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.   

கொட்டகலையில் உள்ள அந்த, எதிர் வேட்பாளரின் வீட்டுக்கு, புத்தாண்டு தினத்தன்று, இரவு 9 மணியளவில், பழத்தட்டுடன் சென்ற தொண்டமான், “விஷேசம் ஒன்றுமில்லை. பார்த்துவிட்டுப் போகதான் வந்தேன்” என்றுகூறிவிட்டு ​அங்கிருந்து சென்றுவிட்டாராம்.   

கொட்டகலை பிரதேச சபைக்கு, மலைய மக்கள் முன்னணியின் சார்பில், யானைச் சின்னத்தில் போட்டியிடும், புஸ்பா என்றழைக்கப்படும் புஸ்பநாதன் என்பவரின் வீட்டுக்கே, ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை அடுத்து, கடுமையாக சந்தேகம் கொண்ட மலையக மக்கள் முன்னணியின் தலைமையும், முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் முன்னணியைச் சேர்ந்தவர்களும், அந்த வேட்பாளருடன் முகம் சுளித்துக்கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.   

எனினும், “பழத்தட்டைக் கொடுத்துவிட்டு, என்னைப் பார்த்துவிட்டு போவதற்கே, ஆறுமுகன் தொண்டமான், என் வீட்டுக்கு வருகைதந்தார்” என, ​ வேட்பாளர் புஸ்பா தெரிவித்தார்.   

“மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த பெ.சந்திரசேகரன் காலத்திலிருந்து, இவ்வாறான அரசியல் சித்துவிளையாட்டுகள் இடம்பெற்றன என்றும், அதற்குள் தான் ஒருபோதும் சிக்கிக்கொள்ள வில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X