2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பூங்கா விவகாரம்; ஒருவாரத்தில் தீர்வு

Editorial   / 2019 மார்ச் 08 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ், டி.சந்ரு

நுவரெலியா, ஹக்கல தாவரவியல் பூங்காவில் நிலவி வரும் பிரச்சினைக்கு, ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஹக்கல தாவரவியல் பூங்காவானது, நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதென்றும், பூங்காவுக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள், நுவரெலியா பிரதேச சபைக்கு வரிசெலுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஆனால், பூங்கா நிர்வாகமானது, எதுவித வரியும் செலுத்துவதில்லை என்றும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், பூங்காவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமாயின், பிரதேச சபையின் அனுமதி பெறவேண்டும் என்றும் ஆனால், பூங்கா நிர்வாகம் எவ்வித அனுமதிகளையும் பெறுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டிய அவர், மாறாக வியாபாரிகளைப் பாதிக்கும் வகையில் பூங்கா முகாமைத்துவம் செயற்படுவதாகவும் சாடினார்.

பூங்காவின் இயற்கை அழகைப் பாதிக்கும் வகையில், 150 வருடங்கள் பழைமை வாய்ந்த மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில், நுவரெலியா மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், விவசாய அமைச்சு, தாவரவியல் பூங்காத் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் தெரிவித்த அவர், அதுவரை பூங்காவில் அகற்றப்படும் குப்பைகளை, பிரதேச சபை பொறுப்பேற்காது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .