2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெரிய வெங்காய விதை உற்பத்தி பாதிப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

அடுத்த ஆண்டுக்கான (2018) சிறுபோகம் மற்றும் பெரும்போகத்துக்கான வெங்காய விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட முடியாத நிலையில் காணப்படுவதாக, மாத்தளை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் குசும் செனவிரத்ன தெவித்தார்.

மாத்தளை மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரசன்ன மதநாயக்க தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்றது. இதில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்படும் தம்புள்ளை, கலேவல பிரதேசங்களில் கடந்த சில தினங்கள் தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக வெங்காய உற்பத்தி முற்றாக அழிவடைந்ததுடன், இதன் காரணமாக, வெங்கா விதை உற்பத்தி மேற்கொள்ளப்படும் கால அட்டவணைப் பிரகாரம் அதனை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெரிய வெங்காய செய்கை ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களில் இவ்வாறானதொரு நிலை தோன்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X