2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ‘டிசெம்பர் வரை காலக்கெடு’

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்   

பெருந்தோட்டக் கம்பனிகளால், தொழிலாளர்களுக்குச் செலுத்தப்படாத ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி உள்ளிட்ட ஊழியர் சேமலாப நிதிகளை, உடனடியாக செலுத்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பெருந்தோட்ட மேற்பார்வை பிரிவின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.   

பொதுவாக பெருந்தோட்டங்களில் காணப்படும் அரச, தனியார் கம்பனிகள், பெருந்தோட்டங்கள் தொழிலாளர்களிடம் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி உள்ளிட்ட ஊழியர் சேமலாப நிதிகளை முறையாக மாதாந்தம் அறவிட்டாலும், அந்தப் பணங்களை மத்திய வங்கியில் வைப்பில் இடப்படுவதில்லை என்றும் தொழிலாளர்கள் ஓய்வு​பெறும் காலத்தில், தங்களது கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில், பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

இந்நிலையில், இது தொடர்பான கலந்துரையாடலொன்று, நேற்று (04) முன்னெடுக்கப்பட்டபோதே, இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.   

இதற்கமைய, கம்பனிகளால் தொழிலாளர்களுக்குச் செலுத்த வேண்டிய ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி உள்ளிட்ட ஊழியர் ​சேமலாப நிதிகளை, இவ்வருடம் டிசெம்பர் மாத இறுதிக்குள் உடனடியாக செலுத்துமாறு, கடிதம் மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.   

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர் ,   

தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவுகள், ஒழுங்கான முறையில் மத்திய வங்கிக்குச் செலுத்தப்படாததாலேயே, இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எனவே, டிசெம்பர் மாதத்துக்குள், அனைத்து தோட்ட நிறுவனங்களும், தொழிலார்களுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கொடுப்பனவுகளையும் வங்கியில் வைப்பில் இட வேண்டும் என்ற முடிவுக்கு அமைச்சு வந்துள்ளது என்றும் இதை, ​பெருந்தோட்ட நிறுவனங்கள், கட்டாயமாகக் கடைபிடிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X