2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்ட மக்களை ஏமாற்றுவதாக அரவிந்தகுமார் குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட நிறுவாகங்களால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர்கள் தலையிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு மீண்டும் அறவிடும் முறையிலேயே பொருட்கள் வழங்கப்படும் நிலையில் சில தோட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான செயற்பாடு இடம்பெற்று வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

நகர்புற கடைகளுடன் ஒப்பிடும்போது அத்தியாவசிய பொருட்கள் 10 ஷரூபாய் அதிகமாக தோட்டங்களில் விற்பனை செய்யப்படுவதாக, அவர் கூறியுள்ளார்.
ஆகவே இதற்கு பெருந்தோட்ட மக்கள் அகப்படாமல் உசாராக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கேட்டுள்ளார்.

அதிக விலையில் பொருட்களை விற்றால் அதனை கொள்வனவு செய்ய போவதில்லை என்பதை தோட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில தோட்ட நிர்வாகங்களும், இடைத்தரகர்களும் இணைந்து இவ்வாறு பெருந்தோட்ட மக்களின் பணத்தை உரிஞ்சும் செயற்பாட்டை கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .